அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் Whatever He Says To You Do It 53-06-01 1. வழியிலே அவன் சற்று.....சாத்தான், ஒருவேளை அவனுக்கு இந்த இரவு நான் வரகூடாது என்று விரும்பி இருப்பான், ஆனால் _ தேவன் ஒரு வழியை ஆயத்தபடுத்தினார். அது ஒரு........எனக்கு ..........அதை செய்ய மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. சென்ற இரவு நான் இங்கு வந்தவுடன், அந்த சிறிய பெண் ஒரு தூக்கு படுக்கையில் வந்துகொண்டு இருந்தாள், ஆகையால் அதற்காக எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவள் இன்றிரவு அவள் நன்றாக இருப்பதாக என்று சொன்னாள். ஆகையால் நமது ஆண்டவர் இதை அவளுக்கு செய்தார் என்பதற்காக, நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இன்றிரவு, இங்கே வெளியே உட்காருவதற்கு சற்று குளிர்ந்து இருபதால் நான் பேசமாட்டேன். அந்த பகுதியை சகோதரன் பாக்ஸ்டர் (Baxter) செய்து முடித்து விட்டார். உடனடியாக வியாதியஸ்தற்கு ஜெபிக்க நான் செல்கிறேன். தேவன் தாமே உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. பரிசுத்த யோவான் இரண்டாம் அதிகாரத்திலிருந்து ஒரு சிறு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 2. அவர் உங்களுக்கு என்ன செய்ய சொல்கிறாரோ, அதன்படி செய்யுங்கள். அது ஒரு வியப்பூட்டும் காரியம், அல்லவா? அவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள். மற்றும் தமது வார்த்தையில் அவர் என்ன சொன்னார் என்பதை இங்கே பார்க்கவும். அவர் சொன்னார், "நீங்கள் ஜெபிக்கும் போது உங்களுக்கு என்னென்ன காரியங்கள் மீது விருப்பமோ, அதை பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசியுங்கள், உங்களுக்கு அவை கிடைக்கும்." அதை தான் நாம் செய்யவேண்டும். அப்படித்தானே? மற்றும் இப்போது, இந்த கூட்டத்தில் ஏதாவது ஒன்று நடப்பதற்காக, நான் சற்று இந்த இரவு ஜெபிக்கிறேன், அது ஒவ்வொரு இருதயத்தையும் தேவனை அதிகமாக நேசிக்க காரணமாக இருக்கும் _ அது உங்கள் எல்லா ஜனங்களும். நான் பெரிய கூட்டங்களையும், அது போன்ற மக்களையும் பார்த்து இருக்கிறேன். ஆனால் உங்களை போன்று அருமையான, கீழ்படிதலான ஜனங்களை பார்த்ததில்லை. மேலும் நான் ஜெபித்து கொண்டிருக்கையில், போராட்டத்தின் மத்தியில் இருந்து நீங்கள் இந்த வழியாக வந்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன். அது கரடுமுரடானது, ஆனால் அது ஆசிர்வாதமான வழி, அது அப்படித்தானே.......?.....நான் சற்று..........உங்களுக்கு ஒருவேளை_ ஒருவேளை போராட்டம் இல்லை என்றால், பின் வெற்றி இல்லை. ஆனால் ஒரு வெற்றி வருவதற்கு உங்களுக்கு ஒருபோராட்டம் அவசியம். உங்களுக்கு போராட்டம் இல்லாமல் உங்கள் விருப்பத்தை பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என்றால், அது _ அது _ அது _ ஒரு வெற்றியாக இருக்காது. எவன் ஒருவன் அதை மேற்கொண்டு வருகின்றானோ அவன் தான் வெற்றியை பெற முடியும். அது போல இயேசு இந்த பூமிக்கு வந்தார். அவருக்கு ஒரு யுத்தம் இருந்தது. மற்றும் இந்த இரவு நமக்கு ஒரு யுத்தம் இருக்கிறது கிறிஸ்துவின் மூலமாக நாம் வெற்றியை பெற முடியும். இப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உடனடியாக நாம் சுகவீனரை அழைக்கவும் மற்றும் அவர்களுக்காக ஜெபிக்கவும், துவங்குவோமாக. இந்த இரவு நான் அதிக நேரம் எடுக்க மாட்டேன், ஏனென்றால் இங்கே வெளியில் குளிர்ந்து இருக்கிறது-வெளியில் குழந்தைகளும், சுகவீனரும் இங்கே சுற்றி உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், இப்போது ஜெபிப்பதற்கு சற்று நமது தலைகளை வணங்குவோம். 3. இப்பொழுதும் எங்கள் பிதாவே உம்முடைய தாழ்மையான ஊழியக்கார்களாக உம்மிடத்தில் வருகிறோம். இங்கிருக்கும் சுகவீனர்கள்ளுக்காக மிகுந்த பரிதாப உணர்வுடன் உம்மிடத்தில் வருகிறோம். சிலர் போர்வைகளால் தங்களை மூடிகொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். ஒருவேளை உமது உதவி கிடைக்கவில்லை என்றால், சிலர் அதிக நாட்கள் ஜீவிக்கமாட்டார்கள் போல உள்ளது. மேலும் நான் ஜெபிப்பது என்னவென்றால், கர்த்தாவே ,நீர் யாரையும் ஏமாற்றுபவர் அல்ல. ஜெபிப்பதற்காக இங்கு எல்லோரும் ஒன்றுகூடி வருவதற்கு அவர்கள் எடுத்த எல்லா முயற்சியும், ஏற்கனவே அவர்களுக்கு நீர் வகுத்து வைத்திருக்கும் வழியை பார்ப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் தாமே, சரியாக இந்த இரவு இங்கேயே இறங்கி அவர்கள் இருதயதிற்கு மிகுந்த விசுவாசத்தை அளிப்பாராக. நீர் ஒரு வழியை ஆயத்தபடுத்தி வைத்திருக்கிறீர். அப்போது அந்த வரை படத்தையும், நீல அச்சுபடியும் தெளிவாக பிதாவே, இன்று இரவு தேவையுள்ள அனைவருக்கும் தெளிவாகக் காட்டப்படட்டும். இந்த பட்டணத்தை ஆசிர்வதியும். எல்லா மந்திரிகளையும் அசிர்வதியும். எல்லா இடங்களில் உள்ள அவர்களின் அதிகாரிகளையும் அசீர்வதியும். எல்லோருக்கும் உதவி செய்யுமாறு கேட்கிறோம். இந்த கூட்டங்களுக்கு ஒத்துழைத்து உதவிப் புரியும் எல்லா போதகர்களையும் அசீர்வதியும் பிதாவே. அநேக மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து உமக்கு சேவை செய்ய கூடி இருக்கும் எல்லோரையும், ஒவ்வொரு வழியிலேயும் உதவி செய்யும் எல்லோரையும் ஆசீர்வதியும். மற்றும், கடைசியில் உம்முடைய நாமத்தை போதிக்கும் என்னையும் நினைவுகூறும். மேலும் இந்த இரவு ஏதாவது ஒன்று நடக்கட்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜனங்களை இதற்கு முன் உம்மை நேசித்ததை காட்டிலும் உம்மில் அதிக அன்பு செலுத்த காரணமாக இருக்கும். மற்றும் விசுவாசம், அன்புடன் இசைந்திருக்கிறது என்று நாங்கள் அறிவோம். மற்றும் _ நம்முடைய பிதாவின் அன்பு அவ்வளவு சிறந்ததாக இருக்கும் போது, விசுவாசமானது கழுகை போல எழும்பி, பறக்கும், அதுபோல அவர்களது சுகவீனத்தில் மற்றும் _ நம்முடைய பிதாவின் அன்பு அவ்வளவு சிறந்ததாக இருக்கும் போது, விசுவாசமானது கழுகை போல எழும்பி, அவர்களது சுகவீனமும், பயங்களும், மற்றும் இந்த உலகத்தின் எல்லா ஐயங்களும் பறந்து சென்று அவர்கள் இயேசுவோடு தனிமையாக இருக்கட்டும். மற்றும் அவரது வல்லமை அவர்களை சுகப்படுத்த அங்கேயே இருக்கட்டும். இவ்வணைத்தையும் அவருடைய நாமத்தில் கேட்கிறோம்.ஆமென். 4. என்னிடம்........ 20 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு சிறுவனாக இருக்கும் போது, இயேசு கிறிஸ்துவை என் இருதயத்திற்கு அருமையான இரட்சகராக கண்டுகொண்டேன். அன்றிலிருந்து நான் அவரை மிகவும் நேசித்தேன். நான் கடினமான போராட்டங்களுக்குள் சென்றேன். என்னுடைய வாழ்க்கை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது போல, என் வாழ்க்கை ஒரு சவுகரியமான மலர் படுக்கையாக இருந்தது இல்லை. அது ஒரு போராட்டத்திற்கு பின் மறு போராட்டமாக இருக்கிறது. என் மனைவியையும், என் குழந்தையையும் என் தகப்பனாரையும் மற்றும் என் சகோதரனையும் இழந்த பிறகு ஒரு நாள் என்னுடைய ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியும் குழந்தையும் சிலமணி நேரங்கள் இடைவேளையில் இறந்தனர். நான் ஒரு ஜோடி பூட்ஸ் அணிந்து கொண்டு அந்த சாலை வழியாக நடந்து கொண்டிருந்தேன். அது 1937 வருடத்தில் ஏற்பட்ட புயலுக்கு பிறகு இண்டியானாவின் மாநில சினேட்டர், _ திரு இஸ்லர் அவர்கள், என்னுடைய சபை அங்கத்தினர் ஆவர், அவருடன் அழுது கொண்டு நடந்து சென்றேன். அவர் என்னை அவருடைய வண்டியில் அழைத்து செல்லும்போது, வண்டியை நிறுத்தி, வெளிய குதித்து, அவருடைய கரங்களால் என்னை அரவணைத்து சொன்னார், "பில்லி." நான் சொன்னேன், "சொல்லுங்கள் திரு இஸ்லர், அவர்களே." "அவரைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?" என்று சொன்னார். நான் சொன்னேன், "நான்அவரை நேசிக்கிறேன்." நான் சொன்னேன், "அவரை நேசிப்பதை தவிர, வேறு எதையும் என்னால் செய்ய முடியவில்லை. என்னை உருவாக்குகிற முழு காரியமும் அவருடைய பங்காக இருக்கிறது." பாருங்கள்? மற்றும் நான் சொன்னேன், "........என்னால் செய்ய முடியாது." "உன்னுடைய மனைவியும், குழந்தையும் எடுத்துவிட்ட பிறகும் அப்படி சொல்கிறீர்களா?" என்று சொன்னார். நான் சொன்னேன், "அவர் என்ன செய்தாலும் அது ஒரு காரியமே கிடையாது. ஒருவேளை அவர், நியாத்தீர்பிலும் நான் தகுதி இல்லை என்று என்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்றாலும், அவர் சரியாக தான் இருக்கிறார். மற்றும் நரகத்தில் ஒரு பொருள் இருந்து அதற்குள் அன்பு என்று ஒன்று இருக்கும் என்றால், அவர் எனக்கு என்னவாக இருந்தார் என்பதற்காக, நான் இன்னும் அவரை அங்கே நேசிப்பேன். அவர் என்னை புறக்கணித்தால், அவர் இன்னும் நீதியுள்ளவராக இருக்கிறார். நான் அதற்கு தகுதி உள்ளவன் தான். எல்லோருமே அதற்கு தகுதியாக தான் இருக்கிறோம். அவருடைய வார்த்தை உண்மையாக உள்ளது. 5. நான் தெய்வீக சுகமளித்தலை நம்புகிறேன். ஏனென்றால் என்னுடைய இருதயத்தில்.................இருக்கிறது. இன்று இரவு தேவன் இங்கு இருக்கிறார் என்று நம்புகின்றேன். நான் சொல்வது போல இந்த வெளிச்சம் எவ்வளவு நிஜமாக இருக்கிறதோ அதே போல அந்த வெளிச்சம் இங்கே இருக்கிறது. அந்த வெளிச்சம் இருக்கிறது போல, தேவனுடைய வல்லமை ஒவ்வொரு ஜனத்தின் மீதும் இருக்கிறது. இப்போது, அந்த வெளிச்சத்தை எடுப்போம். நாம் ஆச்சரியப் படுகிறோம். இங்கே தெய்வீக சுகமளித்தலையும், தேவனுடைய வல்லமையையும், நம்புகிற அநேக ஜனங்களை, பையித்தியகாரர்கள் என்று கருதப்படுகின்றனர்? அவர்கள் எப்பொழுதுமே அப்படிதான். மற்றும் அதனால் நான் நினைக்கிறேன். சிலவேளைகளில் அந்த வெளிச்சத்தை பார்க்கும் போது, நான் அந்த வெளிச்சத்தை நினைக்கும்போது, அந்த வெளிச்சம் - தேவன் உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, மின்சாரம் உலகத்தில் இருந்தது, ஆனால் அவர்களுக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை, அது பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் ஒரு மனிதன் இருந்தான், மின்னல் அடிப்பதை பார்த்து அவன் நினைத்தான். நல்லது, அதில் ஏதோ ஒன்று இருக்கிறது, அதில் ஒரு வல்லமை இருக்கிறது. மற்றும் அவன் ஒரு சாவியை ஒரு பட்டத்தின் வாலில் கட்டி அதை சுற்றி பறக்கவிட்டான். பென்ஞ்சமின் பிராங்களின் என்ற அந்த நபர், கொஞ்ச நேரத்திற்கு பிறகு, அவர் _ அவர் _ அந்த மின்சாரத்தை ஒரு ஓயர் மூலமாக இழுத்து ஒரு பாட்டிலில் பிடித்தார். மேலும் அவர் அந்த மின்சாரத்தை பிடித்தார். அவர் கூச்சலிட ஆரம்பித்தார்; "எனக்கு கிடைத்து விட்டது; எனக்கு கிடைத்து விட்டது." தனக்கு என்ன கிடைத்தது என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் நான் நினைப்பது போல, கிறிஸ்துவை நாம் அனைவரும் அறிந்தபிறகு, "நான் பெற்றுக் கொண்டேன், நான் பெற்றுக் கொண்டேன்." என்று பாடுவதை போல இருக்கும். அதை எந்த மட்டும் அறிந்திருக்கிறோம் என்பது அதை பொருத்தது. 6. ஆனால், அந்த வழியாக ஒரு மனிதன் வந்தார், அவர் பெயர், தாமஸ் எடிசன். அவர் அது ஒரு வெளிச்சத்தை உண்டாக்கலாம் என்று நினைத்தார். ஆகையால் அந்த வெளிச்சம் ஒரு ஒயர் மூலமாக தொடரும் என்றால், அது மனித குலத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார்; அது ஏதாவது செய்ய உதவும் என்று அறிந்தார். அது அவரை ஊக்கப்படித்தியது. கர்த்தர் அதை மனித குலத்திற்கு ஊக்கப்படுத்துவதற்காக இங்கே வைத்தார். ஆகையால் அவர், அது வெளிச்சத்தை உண்டாக்கும் என்று சொன்னார். ஜனங்கள் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றனர். ஆனால் அவர் அப்படியல்ல. அவர்-ஜனங்களின் விமர்சனங்களில் மூலமாக, மற்றும் எல்லவற்றோடும் அயராது மணிக்கணக்கில் உட்கார்ந்து, ஒரு கப் காபி, மற்றும், ஒரு சாண்ட்விச்சுடனும், பல ஆயிரக்கணக்கான ஓயர்களுடனும் முயற்சி செய்தார். முடிவில், சிறிது நேரம் கழித்து ஒரு ஓயர் வெளிச்சத்தை உண்டாகியது. இப்போது மின்சாரம் சாதாரணமாகிவிட்டது. நான் சென்று ஒரு ஸ்விட்சை தட்டினால் வெளிச்சம் வரவில்லை என்றால், மின்சாரம் என்ற ஒரு காரியமே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நான் வயர்கள் எங்கோ பின்னி இருக்கின்றன என்று சொல்வேன். நல்லது, இப்போது நான் யாருக்காவது ஜெபித்து, அவருக்கு சுகம் கிடைக்கவில்லை என்றால், ஏன் கிடைக்கவில்லை? "தெய்வீக சுகம் அளிப்பது என்பது ஒன்று இல்லவே இல்லை." அது தவறு, நமது வயர்கள் எங்கோ பின்னிக்கொண்டு இருக்கிறது. பாருங்கள்? காரணம், தேவன் தான் சுகமளிப்பவர். இப்போது, வேதம் என்ன சொல்கிறது, அவர் தான் சுகம் தருபவர். அவர், அவர் இன்னும் சுகமளிப்பவராகவே இருக்கிறார் என்று சொல்கிறார். அவர் எப்பொழுதுமே நமது வியாதியிலிருந்து சுகமளிப்பவராகவே இருப்பார். அவர் யெகோவா ரஃபா. அவர் யெகோவா மனாசேஸ். அவர் யெகோவா ஈரா. அவர் எல்லாம் -யெகோவாவின் மீட்பின் பெயர்களெல்லாம் இயேசுவில் அடங்கியிருக்கின்றன. அவர் நமது இரட்சகர், அடைக்கலமானவர், நமது கேடகம், நமக்கு சுகம் தருபவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். மற்றும் அவர் இந்த இரவில் இங்கிருக்கிறார். 7. மற்றும் அந்த தாவீது சொன்னது போல, "ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடும் போது ............" ஆழத்தை நோக்கி எனது இருதயம் இப்பொழுது கூப்பிடுமானால், அதற்கு மறுமொழி சொல்ல ஒரு ஆழம் இருந்தாக வேண்டும். அப்படித்தானே இருக்கும்? வேறு வார்த்தையில் சொல்வேன் என்றால், "ஒரு மீனின் உடம்பில் துடுப்பு அதற்கு பின்புறத்தில் இருக்கும் முன், அந்த துடுப்பை உபயோகப்படுத்துவது முன், முதலாவது தண்ணீர் அதற்கு முன்பே இருக்கவேண்டும் இல்லையேல் அதற்கு துடுப்பு இருந்திருக்கவே முடியாது. "மற்றும் ஒரு _ இருக்குமானால் _ பூமியில் ஒரு மரம் வளர்வதற்கு முன்னால், முதலாவது ஒரு பூமி இருந்திருக்க வேண்டும், இல்லையேல் வளர்வதற்கு ஒரு மரம் கூட இந்த பூமியில் இருக்காது. 8. இங்கே சில காலத்திற்கு முன்பு, நான் பார்த்த போது _ ஒரு சிறு குழந்தை, ஒரு சிறு பையன், பென்சிலில் உள்ள இரேசரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். மற்றும் சைக்கிளில் உள்ள பெடலை சாப்பிட்டுவிட்டு விட்டான். மற்றும் அந்த சிறுவனை எடுத்து சென்று, பரிசோதித்தனர். மேலும் அந்த ரப்பரில் உள்ள கந்தகம் என்னும் பொருள் அவனுக்கு தேவை பட்டு இருந்ததாக நான் நம்புகிறேன். அவனுடைய சிறு உடம்பு கந்தகத்திற்கு ஏங்கினது. இப்போது அந்த சிறுவன் பூமியிலிருந்து எடுக்கபட்டுவிட்டான்: நாம் எல்லோரும் பூமியிலிருந்து தான் வந்துள்ளோம். மற்றும் பூமியில் தான் கந்தகம் இருக்கிறது. இப்போது ஏதோ ஒன்று இங்கு கந்தகத்தின் தேவையை அறிந்து கூப்பிடும் என்றால் நிச்சயமாக, அந்த கந்தகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய, கண்டிப்பாக இங்கே கந்தகம் இருந்தாக வேண்டும். அல்லது கந்தகத்தின் கூப்பிடுதலே இருக்காது. நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று பாருங்கள்? மற்றும் எத்தனை பேர் இங்கு தெய்வீக சுகமளிப்பத்தை நம்புகிறீர்கள்? இப்போது பாருங்கள். இந்த உலகத்தில், தெய்வீக சுகம் அளிப்பது, உங்கள் குழு மட்டும் தான் நம்புகிறது என்றால், அல்லது நான் மட்டும் தனியே நின்று, அல்லது நீங்கள் மட்டும் தனியே நின்று தெய்வீக சுகம் அளிப்பதை நம்புவோம் என்றால், இருதயதிற்குள் ஒரு சிருஷ்டிப்போ, அல்லது சிருஷ்டிப்போ உண்டாவதற்கு முன்பே ஒரு சிருஷ்டிகர் அந்த சிருஷ்டிப்பை உண்டாக்குவதற்கு இருந்தாக வேண்டும். அது சரி தானே? மற்றும் நமது இருதயத்தில், தேவனிடம் இருந்து சுகம் பெற வேண்டும் என்ற பசி இருக்கும் என்றால், எங்கோ ஒரு இடத்தில் ஒரு ஊற்று திறந்திருக்க வேண்டும். அங்கே ஒன்று இருக்க வேண்டும்: ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுதல். 9. நாம் ஏன் இந்த குளிர்ந்த இரவில் சிமெண்ட் தரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். ஒரு சிறு கூட்டமாக, நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்து, போர்வையால் நாம் நம்மை ஏன் மூடிக்கொண்டு காத்திருக்கிறோம்? ஏனென்றால் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்குள்ளே ஏதோ ஒன்று கூப்பிடுகிறது. அங்கே ஒன்று..........தேவனோடு நெருங்கி நடப்பதற்கு எத்தனை பேர்களுக்கு பிரியம்? எல்லோருக்கும் ......ஏன், நிச்சியமாக தேவனை பற்றி அறிய அதிகம் உண்டு. 10. மார்ட்டின் லுத்தரின் முதல் சீர்படுத்துதல் நடக்கும் போது, அவர்கள் சொன்னார்கள், "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்." வெஸ்லி என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் புது பிறப்பை பற்றி விசுவாசித்து எழும்பினான். அதில் அவன் சென்றுக்கொண்டிருந்தான். மற்றும், ஜனங்கள் எப்போது தேவனைபற்றி அதிகம் அறிய பசிக்கொண்டனரோ, அங்கே எப்பொழுதுமே தேவன் அதிகமாக அறியப்பட்டார் . மற்றும் எப்போது வெஸ்லியர்கள் முடிவுக்கு வந்தனரோ, உடனே பெந்தகோஸ்தேயினர் எழும்பினர். இப்போது அவர்கள் முடிவுக்கு வரும் போது, ஏதோ ஒன்று எழும்பியது . தொடர்ந்து, ஆழம் கூப்பிடுகையில், ஆழம் விடை தரும். அது சரியா. ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுதல். இப்போது அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள். அவர் என்ன சொன்னாலும் அது ஒரு காரியமே அல்ல, நீங்கள் அவரை நம்புங்கள். அவர் என்ன சொன்னாரோ, அதை செய்யுங்கள். மற்றும், கர்த்தர் அதை நடப்பிப்பார். 11. இப்போது, பரிபூரண விசுவாசமானது, பரிபூரண அன்பு போல, எல்லா பயத்தையும் எல்லா சந்தேகத்தையும் வெளியேற்றும். அது எப்படிபட்ட அறிகுறிகளை காண்பித்தாலும் சரி, என்ன முடிவை ஏற்படுத்தினாலும் சரி நீங்கள் நம்புவீர்கள் என்றால், அதை அதே விதமாக நம்புங்கள். உங்களுக்கு, ஏதோ ஒன்று இருந்து, அது அப்படியே நடக்கப்போவதாக அறிந்திருந்தால்? அது அவ்வாறு நடக்காது என்பதாக தென்பட்டாலும் அது ஒரு காரியமே அல்ல, அது எப்படியாயினும் நடக்கப்போகிறது, ஏனென்றால் நீங்கள் அந்த வழியில் தான் நம்புகிறீர்கள். இப்போது, இயேசு ஏதாவது ஒன்று சொல்வார் என்றால் அவருடைய வார்த்தை ஒரு வித்தாக இருக்கிறது. மற்றும் ஒவ்வொரு விதையும் அதன் தன்மையை பிறப்பிக்கும். அது இரட்சிப்புக்குறிய வாக்குதத்தின் விதையாக இருக்கும் என்றால், அது இரட்சிப்புக்கான வேலையை செய்யும். அது ஒருவேளை சுகம் தருவதற்கான ஒன்றாய் இருக்கும் என்றால், அது சுகம் தருவதற்கான வேலையை செய்யும். அது சந்தோஷம், சமாதானம், மற்றும் உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், அந்த எல்லா மீட்பின் ஆசிர்வாதங்களும் கிறிஸ்துவுக்குள் இருகின்றது. மற்றும், இன்றிரவு அவர் உங்கள் அறிக்கையின் மீது, ஒரு பிரதான ஆசாரியராக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். (எபிரேயர் 3: 1) உங்கள் அறிக்கையின் மீது பரிந்து பேசுபவராக பரலோகத்தில், மாட்சிமை பொரிந்தியவராய் வலது பாரிசத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். 12. இப்போது நீங்கள் இரட்சிப்படைய போவதற்கு முன்......நான் அதிக நேரங்களில் இப்படி சொல்வதை, "ஓ, அது என் முகத்தின் மீது ஒரு வேகமாக வீசும் காற்றை போன்று இருந்தது என்று கேட்டிருக்கிறேன்." நல்லது, அது ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால், அதினால் தான் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் விசுவாசித்தீர்கள், ஆகையால் இரட்சிக்கப்பட்டீர்கள். அதினோடே வேற எந்த அனுபவமும் இருந்தது ஒரு பொருட்டல்ல, முதல் காரியம் நீங்கள் நம்பவேண்டும்.மற்றும், நீங்கள் எந்த உணர்வும், உணரவில்லை என்றால், பரவாயில்லை. இயேசு ஜனங்களை நோக்கி, ஏதாவது ஒன்றை உணர்ந்தீர்களா என்று கேட்கவில்லை. அது உணர்வினால் அல்ல; அது விசுவாசத்தினால் உண்டானது. ,ஆகையால் நீங்கள் நம்புங்கள். மேலும் நீங்கள் அந்த இடத்தை விட்டு எழும்பும் போது உங்கள் இருதயத்திலிருந்து ஏதோ ஒன்று, நீங்கள் இரட்சிக்கபட்டீர்கள் என்று சொல்லும். நீங்கள் வெளியே சென்று ஜனங்களிடம் சொல்லுவீர்கள், "நான் இரட்சிக்கபட்டேன். "நீங்கள் இரட்சிக்கபட்டதை அறிக்கையி டுகிறீர்கள். நீங்கள் இரட்சிக்கபட்டதாக நம்புகிறீர்கள், நீங்கள் இரட்சிக்கபட்டதை நடைமுறையில் காண்பிக்கிறீர்கள். மற்றும் அது இரட்சிப்படைய வேலை செய்கிறது. கொஞ்ச காலத்திற்கு பிறகு இந்த முழு உலகமும் அல்லது உங்களோடு இணைந்திருப்பவருக்கு நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று தெரிய வரும். ஏனென்றால் நீங்கள் இரட்சிக்கபட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் எப்போது உங்களுக்கு நீங்கள் இரட்சிக்கபடவில்லை என்று நினைக்கிறீர்களா, அப்போது உடனே நீங்கள் இரட்சிக்க்கபட்டதாக சாட்சி சொல்லுவதிலிருந்து நிறுத்திக்கொள்ளுங்கள். அந்த பழைய அசுத்தத்திற்கே சென்று விடுவீர்கள். அது சரிதானே. ஏன்? அவருக்கு வேலை செய்ய முடியாது _ உங்களுக்காக அவர் ஒன்றும் செய்ய முடியாது, காரணம் அவர் தான் உங்கள் அறிக்கையின் மீது உள்ள பிரதான ஆசாரியராய் இருக்கிறார். இப்போது அவர் தான் உங்கள் அறிக்கையின் மீது உள்ள பிரதான ஆசாரியர். உங்கள் மீறுதலுக்காக காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். இப்போது, உங்கள் சுகத்தை ஏற்றுகொள்வீர்கள் என்றால் (இந்த மேடையின் மீது அல்ல, சரியாக நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலே) சொல்லுங்கள், "தேவனே, நான் உமது வார்த்தை உண்மை என்று இப்போது ஏற்றுக்கொள்கிறேன், இப்பொழுது நீர் தான் எனக்கு சுகமளிப்பவர்." 13. நான் இந்த மேடையில் சுமார் 95 % ஜனங்கள் ..........மன்னிக்கவும், நான் அதை மாற்றட்டுமா? 99% ஜனங்கள் விசுவாசத்திற்கு பதிலாக நம்பிக்கை வைத்துள்ளனர். ஓ, சொல்கிறார்கள், "எனக்கு எல்லா விசுவாசமும் உண்டு, சகோதரன் பிரன்ஹாம்." நல்லது, இப்போது இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? உங்கள் கிரியைகள் அதை நிரூபிக்கிற . பாருங்கள்? இப்போது விசுவாசத்திற்கு தோல்வி என்பதே கிடையாது. விசுவாசம் பரிபூரணமான ஒன்று. நம்பிக்கை ........நீங்கள் சொல்வீர்கள், "நல்லது _ நான் _ நான் அது இருப்பதாக நான் நம்புகிறேன். நான் _ நான் அந்த காரியத்திற்காக நம்பிக்கை கொண்டு இருக்கிறேன். ஆனால் ஹோ _ "விசுவாசம் எனப்படுவது நம்பப்படுபவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது.. "ஆகையால், நீங்கள் அதை நம்பும் போது, நீங்கள் வெளியே போகிறீர்கள். நீங்கள் "நான் சுகமானேன்" என்று சொல்லுவீர்கள். காரணம் உங்கள் இருதயதிற்குள்ளே அதை நம்புகிறீர்கள். பின் அது போல நடக்கிறீர்கள்: மற்றவரிடம் அதை அறிக்கை செய்கிறீர்கள், ஜனங்களிடம் சொல்லுகிறீர்கள், மற்றும் அது எப்படி இரட்சிப்பை கொண்டுவந்ததோ அதை போல சுகத்தையும் கொண்டு வருவதற்கு வேலை செய்யும். இப்போது, உங்களுக்கு அதை புரிந்ததா? அவர் என்ன செய்ய சொன்னாரோ அதை செய்யுங்கள். 14. மற்றும் இந்த நடை மேடையில் பரிசுத்த ஆவியானவர் பேசும் போது, மற்றும் அவர், சாவை உடைய உதடுகளின் (mortal lips) மூலமாக பேசுகிறார். அவர் எப்பொழுதுமே அப்படி தான் செய்வார். எனக்கு பின்னாடி போதகர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். மற்றும் சகோதரர்களே, நீங்களாக உங்கள் வாழ்கையில் ஒரு பிரசங்கத்தையும் பிரசங்கித்தது கிடையாது: பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலமாக பிரசங்கித்தார். அது சரியா? ஓ நாம் எதையோ ஒன்றை எழுதி வைத்து வாசிப்போம். ஆனால் அது _ அது பிரசங்கம் அல்ல. பிரசங்கம் என்பது ஒரு ஊக்கம் வரும் போது மற்றும் (பாருங்கள்) _ அது ஊக்கத்தின் மூலமாக பிரசங்கிக்கப்படும் போது பரிசுத்த ஆவியானவர் அதை செயல்படுத்துவார். இப்போது, நாம் ஏதாவது ஒன்றை வாசிப்போம், மற்றும் அது ஒரு காரியம் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை தக்க வைத்துகொண்டு, ஜனங்களிடத்துக்கு கொண்டு செல்வாரானால், அதற்கு பின் ஏதோ ஒன்று அதை தக்கவைத்து கொள்ளும். பாருங்கள்? மற்றும் அது தான் பரிசுத்த ஆவி. அது உங்கள் போதகர் பிரசங்கிப்பதல்ல. அது பரிசுத்த ஆவி உங்கள் போதகர் மூலமாக உங்களுக்கு அந்த செய்தியை பிரசங்கிக்கிறார். 15. நல்லது அதற்கு பின், யாரோ ஒருவர் ஊக்குவிக்கப்படுதலினால் பேசுகிறார். அது _ அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. மற்றொருவர் ஊக்குவிக்கப்பட்டதினால் அதை வியாக்கியானம் செய்கிறார், மேலும் அதை நேரே யாரோ ஒருவருக்கு அந்த செய்தியை அனுப்பி ,அவர்களுடைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்று சொல்லி, என்ன நடந்தது என்றும், மற்றும்_மற்றும் வித்தியாசமான காரியங்களை செய்யும்படி சொல்கிறார். அது எல்லாம் ஊக்குவிக்கபடுதலினால் வருபவை. அது பரிசுத்த ஆவியினால் ஆனது. பிறகு அவர் _ அவர் அந்த வரங்களை சபைக்கு அனுப்புகிறார். மேய்ப்பர்கள், பிரசங்கிமார்கள், போதகர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சபையை அல்லது பரிசுத்தவான்களை பரிபூரண படுத்த தேவனுடைய வரங்களாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தேவனுடைய ஒரு பெரிய குழு. அவர்கள் இந்த சபையை சேர்ந்தவர்களா அல்லது அந்த சபையை சேர்ந்தவர்களா என்பது ஒரு பொருட்டல்ல, தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால் மாத்திரம் போதும். நாம் தேவனுடைய புதல்வர்களும், புதல்விகளுமாக இருக்கிறோம். அது அற்புதமாக இல்லையா? அதை இன்றிரவு, எல்லா கிறிஸ்தவர்களும் பார்ப்பார்களானால் அருமையாக இருக்கும் அல்லவா? அப்படி தானே அது_ நமக்கு ஒரு மறுமலர்ச்சி உண்டாகும் அல்லவா? 16. சமீபத்தில், ஒரு இளைய போதகரிடம் பேசிக்கொண்டு இருந்தேன், அவர் கொரியா தேச பட்டாளத்தில் இருந்தவர், கொரியா அல்ல ஜப்பானின் கடைசிப்போர் நடந்து கொண்டிருக்கும் போது அவர் பட்டாளத்தில் இருந்தார். மற்றும் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். அவர் சொன்னார், அவர்கள் அவரை பிடித்து உள்ளே தள்ளியதாகவும், அவர் _ அவர் பட்டிணி கடந்து சாகுவதாகவும் சொன்னார். அவரிடம் சில கெட்டுப்போன, பூசனம் பிடித்த ரொட்டி இருந்ததாகவும், மற்றும் அவர் எழுந்து நின்று, கரங்களை உயர்த்தி, தேவனை துதிக்க ஆரம்பித்ததாக அவர் சொன்னார். அவர் சொன்னார், "தேவனே ,எனக்கு மூன்று சிறிய பிள்ளைகளும், மனைவியும் வீட்டில் இருக்கின்றனர். "ஆனால் நான் இங்கிருந்து பரலோகத்திற்கு செல்வதாக தென்படுகின்றது" என்று அவர் சொன்னார். "இங்கிருந்து நான் வரவேண்டும் என்று நீர் விரும்பினால், உமது சித்தமாகக்கடவது." என்று அவர் சொன்னார். மற்றும் அவர் ஒரு புற காவலர் ஒருவர் ஒரு முள் கம்பியை சுற்றி வருவது போல கண்டதாக சொன்னார் .......அவர் இவரை கண்கானித்தார் என்று அவர் சொன்னார். அந்த காவலாளி இவரிடம் பேச விரும்புவதாக என்று அவர் சொன்னார். அவர் அந்த காவலாலியிடம் சென்றதாகவும், மற்றும் அந்த சிறிய மனிதன் கடந்து சென்றதாக கூறினார். அவர் அந்த மனிதனை பார்த்து, "நீங்கள் கிறிஸ்தவரா" என்றார். அவன், "ஆம்" என்று சொன்னான். "நானும் கிறிஸ்தவன் தான்" என்று சொன்னார், பாருங்கள்? அது ஒரு அமெரிக்கனையும், ஜப்பான்காரனையும் சகோதரர்களாக செய்யுமென்றால், அந்த ஜப்பான்காரன் எதுவென்றாலும் செய்யலாம், அவனுடைய கிறிஸ்தவ சகோதரனை அங்கே இருந்து விடுவிக்கலாம். பாருங்கள்? 17. மற்றும், ரஷ்யாவில்........ நான் பின்லாந்தில் , அந்த மரித்த சிறுவனை உயிருடன் எழுப்பும் போது, ஆயிரகணக்கில் மக்கள் மொய்த்தனர். அதில் ரஷ்யர்களும் இருந்தனர்: மற்றும் அந்த ரஷ்யர்கள் அந்த எல்லையைத் (border) தாண்டி கிட்ட வரும் போது, அந்த பின்லாந்துகாரர்களை பிடுத்து கொள்வார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா, அவர்கள் எப்பொழுதுமே ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு, கூக்குரலிட்டு, தங்கள் கைகளை ஆகாயத்தில் உயர்த்தி, தேவனைத் துதிப்பார்கள். தேவனுடைய ராஜியமானது ஒரு மனிதனுக்குளே இருந்தால், அது ஒரு ரஷ்யனையும், பின்லாந்துக் காரனையும் ஒருவரோடு ஒருவர் மீது கரங்களை போட்டுக்கொண்டு, கட்டிப்பிடித்துக் கொண்டு, தாங்கள் சகோதரர்கள் என்று கூறுமென்றால், அது உலகத்தில் உள்ள எல்லா தேசங்களையும் அப்படியே செய்ய வைக்கும். அதுதான் பிரச்சினை. இப்போது, அதன் பரிதாபமான பகுதி என்னவென்றால், கிறிஸ்தவர் என்று கூறும் சபைகளைப் பாருங்கள்; அதுதான் பரிதாபம். இந்த கவிதையை நான் விரும்புகிறேன்: வாழ்க்கை என்பது வெற்று கனவு என்றும்! ஆத்துமா மரித்து தூங்குகிறது என்றும், மற்றும், நடைமுறையில் இருக்கின்ற காரியங்கள் இருக்க வேண்டிய விதத்தில் இல்லை என்று துக்ககரமான பாடல்களால் என்னிடம் சொல்லாதே. இருந்தபோதிலும், வாழ்க்கை என்பது உண்மை! மற்றும் வாழ்கை ஊக்கமானது! கல்லறை அதின் முடிவல்ல; நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய், என்று ஆத்துமா பற்றி சொல்லவில்லை. உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை நம்மை நினைப்பூட்டுவதால், நம்முடைய வாழ்க்கையை நாம் உயர்த்துகிறோம், நம்மை விட்டு பிரிந்தாலும், அவர்களின் அடிசுவடுகளை, காலத்திற்கும் நமக்கு விட்டு செல்கின்றனர். வாழ்க்கையின் சோகமான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிற ஒருவருக்கு அந்த அடிச்சுவடுகள், வாழ்க்கையின் சோகமான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிற ஒருவருக்கு மற்றும் கப்பல் உடைந்து கைவிடப்பட்ட ஒரு சகோதரனுக்கு, அந்த அடிச்சுவடுகளை பார்த்து மீண்டும் உற்சாகம் அடைவான். (அது சரிதானே) .........?........ஊமையாக ஒட்டப்படும் கால்நடையை போல இல்லாமல்! சண்டையில் ஒரு ஹீரோவை போல இரு. 18. நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவர்கள் என்றால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்றால், நாம் கிறிஸ்துவை நேசித்தால், அவருடைய சபையை நேசித்தால், இன்று இரவு அவருடைய ராஜ்யத்தை தேடுகிறவர்களாக இங்கே நாம் இருந்தால், அவருடைய வல்லமையை தேடுவோம் என்றால், விசுவாசத்தை எடுத்துகொண்டு, அவர் என்ன சொன்னாரோ அதை செய்வோம். அவர் என்ன சொன்னாரோ அதை நாம் செய்வோம். அவர் தம்முடைய பாகத்தை காட்டிலும் அதிகமாக செய்கிறார். அது அப்படிதான் அல்லவா? நீங்களாகவே அல்லது நானாகவே இருந்தால்.......நான் ஒரு கடிதத்தில் அதை எழுதி, அதை இன்னும் விசுவாசிக்காமல் போனால், நல்லது, எனக்கு அதற்கு பிறகு பொறுமை இருக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால் அவர் அதை செய்வார், அவர் செய்வார். அவருடைய போதகர்களை அதை பற்றி போதிப்பதற்காக அனுப்புவார். அவர், அவருடைய செய்தியை அனுப்புவார். அவருடைய தீர்க்கதரிசிகளை அனுப்புவார்; அவர் எல்லாவற்றையும் அனுப்புவார். ஆனாலும் இந்த ஜனங்கள், கடந்து சென்று விடுவார்கள். அவருடைய அன்பை வெறுத்து ஒதுக்குவார்கள், மற்றும் அதை நம்ப மாட்டார்கள். அது சரி தானே? 19. நல்லது, நாம் மீண்டும் இப்பொழுது ஜெபிப்போம். பிதாவே உமது குமாரனின் அன்பினால், இந்த இரவு எங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும். உம்மிடம், தாழ்மையான மக்களாக வருகிறோம். நாங்கள் அருகதையற்றவர்கள் என்பதை அறிக்கை செய்ய உம்மிடம் வந்து, நீங்கள் எங்களுடன் இருக்க கேட்டுக்கொள்கிறோம். தேவனே, இந்த ஏழை, சுகவீனம் உள்ள, தேவை உள்ள மக்களுக்காக இரக்கம் பாராட்ட வேண்டும் என்று கேட்கிறோம். மேலும் இந்த இரவு ஒரு மிகுந்த ஆசீர்வாதமான இரவாக நிருபிக்கட்டும். மேலும் பிதாவே, இப்படிபட்ட ஒரு மோசமான இழக்கப்பட்ட பாவியை, கீழே குனிந்து, தூக்கி எடுப்பதற்கு, உம்மால் எப்படி முடிந்தது. மேலும் தேவனுடைய கிருபையால், நான் இப்போது உம்முடைய பிள்ளையாக இருப்பதை நினைக்கும் போது வியப்படைகிறேன். தேவனே இங்கிருக்கிற அநேகர் இன்றிரவு இதே போல தான் நினைக்கின்றனர், மேலும் நீர் எங்களை சுவாசிக்க வைத்ததினால் தான், நாங்கள் இங்கே சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த கட்டிடத்தில் காற்று சுற்றிக்கொண்டு இருப்பது போல உமது மகா மேன்மையான ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது....... சில கணங்களுக்கு முன்பாக, அந்த எடிசன் என்பவர், எப்படி இரவும் பகலும், மின்சாரம் வருவதற்காக அந்த மின்சாரத்தின் வயரை தேடிக்கொண்டு இருந்தார் என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். தேவனே, சென்ற காலங்கள் முழுவதும், குணமாக்கும் மின்சாரத்தை அனுப்பக்கூடிய அந்த ஒரே வயர் தான் நான் கண்டுப்பிடுத்துள்ளேன். மேலும் அது இந்த இரவு இங்கு இருப்பதாக நான் நம்புகிறேன். ஒவ்வொரு சுகவீனரையும் குணமாக்குவதற்கான போதுமான தேவனுடைய வல்லமை இந்த கட்டிடத்தில் அல்லது இந்த அரங்கத்தில் இருப்பதை நம்புகிறேன். ஆம் ஆண்டவரே, எல்லாவிதமான வேலைகளையும் செய்வதற்கான அதிக வல்லமை இருப்பதை நம்புகிறேன். மேலும் எனக்கு தெரிந்த ஒரே வயர் எதுவென்றால் அன்பும், விசுவாசமும். என்னுடைய தகப்பனுக்கு பொய் சொல்ல முடியாது. நான் அவரை நம்புகிறேன், மேலும் அவரை நான் நேசிக்கிறேன், அவரில் விசுவாசம் வைத்திருக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் உம்மை பெற்றுக்கொள்ளவும், உம்மை நம்பவும் ,மற்றும் இந்த இரவு சுகம் பெறவும் நீர் உதவுமாறு, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் ஜெபிக்கிறேன் ஆண்டவரே. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 20. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது. எந்த ஜெப அட்டைகளை உங்களுக்கு கொடுத்தார்கள்? என்ன? [ஒலி நாடாவில் காலி இடம்] நீங்கள் பயபக்தியாக இருங்கள். மேலும் எனக்கு _ எனக்கு அதை தெரியும்...எப்போது ஜனங்கள் அசௌகரியமாக இருக்கிறார்களோ (நீங்கள் பாருங்கள்?) குளிர்ந்து காணப்படுகிறார்களோ, அது கடினமாக இருக்கும். அநேக நேரங்களில், நாம் இப்படி கரங்களை பிடித்துக்கொண்டு மழையில் நின்று, மழை நீர் முகத்தில் தெளித்து கொண்டிருக்க, மற்றும் புயலிலும், அந்த விதமாக தேவனை சேவித்தோம். மற்றும் அதுபோல தானே நம்முடைய பிதாக்கள் அனுபவித்தனர்? ஆகையால் நாம் சில கணங்களுக்கு பயபக்தியாக இருப்போம். இப்போது எனக்கு முன்பாக ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நான்_ நான் அவர்களை பார்த்ததே இல்லை; என்னுடைய வாழ்நாளில் அவர்களை பார்த்ததே இல்லை. அப்படித்தானே சகோதரியே. எனக்கு _ எனக்கு உங்களை தெரியாது. என்னால் ஏதாவது உதவி உங்களுக்கு செய்ய முடியும் என்றால், அதை செய்ய சந்தோஷமாக இருப்பேன். ஆனால் ஒரே ஒரு காரியம் மட்டும் என்னால் செய்ய முடியும், ஏற்கனவே அவளுடைய உதவியை இங்கே கொண்டு வந்த இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுவது தான் என்னால் செய்ய முடியும். கர்த்தருடைய கிருபையால், அவர் அவளுக்கு உதவி செய்வார் என்று நான் இந்த இரவு நம்புகிறேன். மற்றும் அவர் தமது ஆசீர்வாதத்தை அருள வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான ஜெபம். மற்றும் நான் சில கணங்கள் அந்த பெண்மணியிடம் பேசும் போது நீங்கள் எனக்காக அமைதியாக ஜெபித்து கொண்டிருங்கள். மேலும் கர்த்தர் ஒருவேளை அதை அருளுவாராக. 21. இப்போது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இங்கு, எல்லா இடங்களிலும் இருப்பதாக எத்தனை பேர்கள் நம்புகிறீர்கள்? மேலும் ஒரு அடைக்கலான் குருவி வீதியில் விழுவது கூட தேவன் அறியாமல் கீழே விழாது என்று நம்புகிறீர்களா? நீங்கள் அதை நம்புகிறீர்களா? அப்படி என்றால் அவர் கட்டாயமாக இங்கே இருக்க கடமைபட்டிருக்கிறார். (பாருங்கள்?) அவருடைய பிள்ளைகள் எங்கே கூடி ஜெபித்து அவரை தேடுகிறார்கள் என்று இப்போது, அவர் நம் மத்தியில் வருவார் என்றால், அப்போது அவர் சென்ற காலங்களில் தன்னை வெளிப்படுத்தினது போல இப்போது வெளிபடுத்த வேண்டும். அது சரிதானே? இப்போது.....அவர் அந்த கிணற்றண்டையில் உள்ள ஸ்திரீயை போல இருக்கும். நான் இந்த பெண்மணியிடம் சற்று பேச வேண்டும். இப்போது, அவர் ஒருவேளை ஒரு காரியத்திற்கு நேராக என்னை திசைத்திருப்ப முடியும். அவர் ஒரு காரியத்தை யாருக்காவது சொல்லமாட்டார். எனக்கு தெரியாது; அது தேவனுக்குரியது. கர்த்தருக்கு தெரியும்; எனக்கு தெரியாது. 22. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால், என்னுடைய சகோதரி போல உங்களிடம் நான் பேசும் போது, நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு _ எனக்கு உங்களை பற்றி ஒன்றும் தெரியாது. ஒன்றுமே தெரியாது. எனக்கு தெரிந்த மட்டில், உங்களை முதன் முறையாக இப்போது தான் நான் பார்க்கிறேன் என்று கர்த்தருக்கு தெரியும். மேலும் நீங்கள் எங்கிருந்தோ வந்து, ஒரு ஜெப அட்டையை எடுத்து இந்த மேடைக்கு வந்து விட்டீர்கள். ஆனால் நீங்கள் பிறந்த நாள் முதற்கொண்டு கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார். அவருக்கு உங்களை பற்றி எல்லாம் தெரியும். எல்லாம்.....நீங்கள் உண்கின்ற எல்லாம் அவர் உங்களுக்கு கொடுத்தார். அவர், நீங்கள் சுவாசிக்கின்றது காற்றை உங்களுக்கு கொடுத்தார். அது சரிதானே? மேலும் உங்களுக்கு எதையாகிலும் அவர் செய்ய வேண்டும் என்று இருந்தால், அவர் அதை கண்டிப்பாக செய்வார். ஏதோ ஒன்றாக இல்லாமல் இருந்தால் .........எனக்கு உங்கள் பிரச்சனை என்னவென்று தெரியாது, மற்றும் எனக்கு _ எனக்கு _ எனக்கு உங்களை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் ஒரு வேளை அது சற்று.............அது எதுவாக இருந்தாலும் ஏன், கர்த்தர் அதை நிச்சயமாக வெளிப்படுத்துவார், நிச்சயமாக அதை செய்வார். ஆனால் உனக்கு........உனக்கு ஒரு பிரச்சனை இருக்கு, அது உன்னை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்கிறது. அது சரி தானே? உனக்கு இருப்பதை நான் பார்த்தேன். நான் அதை சொன்ன போது ஏதோ ஒன்று நடந்தது, அப்படித்தானே? நான் அந்த அலுவலகத்தில் உன்னை பார்த்தேன், மற்றும் அவர் என்ன சொன்னார் என்று பார்த்தேன். இந்த மைக்ரோஃபோனிலிருந்து ஒரு நிமிடம் தொலைவில் நான் உங்களுடன் பேசலாமா?...?...உங்கள் முதுகிற்கு பின்பாக திரும்பி...?...[சகோதரன் பிரன்ஹாம் அந்த ஸ்திரீயிடம் தனிப்பட்ட முறையில் பேசுகிறார்]... சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர. என் வாழ்க்கையில் அந்தப் பெண்ணை நான் பார்த்ததில்லை. பரிசுத்த ஆவி இங்கு நின்று துல்லியமாகக் காண்பித்தார். எத்தனை பேருக்கு? இந்த பெண்ணை யாருக்காவது தெரியுமா? சரி. பரவாயில்லை. அது உண்மையா, பெண்ணே? அதன் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமா? அப்படியானால், ஜனங்கள் பார்க்கும்படி உங்கள் கையை உயர்த்துங்கள். பாருங்கள்? 23. இப்போது, வேதாகமம் சொல்லுகிறது, "பரிசுத்த ஆவியானவர் வரும் போது, இந்த காரியங்களை உங்கள் ஞாபகத்திற்கு கொண்டுவருவார், மேலும் வரப்போகிற காரியங்களையும் காண்பிப்பார். அது சரிதானே? தேவனுடைய பரிசுத்த ஆவியானவர், இங்கிருக்கும் ஒவ்வொரு வருக்கும் இயேசு கிறிஸ்து இன்றிரவு இங்கு இருக்கிறார் என்பதை அறிவிக்கவேண்டும். அது உண்மை அல்லவா? இப்போது சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக? உங்களுக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று நான் நம்புகிறேன். ஆனால் ஒருவேளை உங்களுக்கு அது தேவைப்பட்டால், கர்த்தர் தாமே அந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரை ஆசிர்வதித்து உங்களுக்கு உதவி செய்வாராக. உங்கள் _ .......... பெற்றுக் கொள்வதற்கு, இங்கே ஒரு நிமிடத்திற்கு வாருங்கள், இப்போது, நான் ஒரு விசுவாசியாக மட்டும் இருந்து உங்கள் மேல் கரங்களை வைக்கிறேன். நிச்சயமாக நீங்கள், பயந்து, வருத்தத்துடன் காணப்படுகிறீர்கள், அது யாராக இருந்தாலும் பயத்தை உண்டாக்கும். ஆனால், நான் நினைக்கிறேன், பயப்படுவதற்கு எந்த வித தேவையும் இல்லை. அதற்கு எந்த தேவையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் நீண்ட காலம் ஜீவிப்பீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இருந்தாலும், ஒரு கணம், நாம் ஜெபிப்போம். இப்போது உங்கள் தலைகளை தாழ்த்தி இருப்பீர்களா? இந்த பெண் மிகவும் மோசமான நிலையில் உள்ளார்கள். எங்கள் பரலோகத்தின் பிதாவே, உம்முடைய பிள்ளை இங்கே இந்த இரவு நின்று கொண்டிருக்கும் போது, வெகு தூரத்தில், ஒரு வெளிப்பாடு உடைக்கப்பட்டு, நேரே இவள் இருக்கும் அறையில் இழுத்து கொண்டு, அந்த மனிதனை பார்த்து அவளிடம் தாங்கள் யார் என்றும், எப்படி இருந்தார்கள் என்றும் ......எப்படி உமக்கு இதை எல்லாம் தெரியும் ,கர்த்தாவே. மேலும் அவர்களை கீழே சரியாக கொண்டு வந்து, கடந்து போன சில காரியங்களை பற்றின சில நினைவுகளை வெளிப்படுத்தும். ஓ, கிறிஸ்துவே, நாங்கள் மிகவும் அருகதை அற்றவர்கள். ஆனால் இந்த ஏழை சகோதரி ,என்னுடைய சகோதரி. உம்முடைய பிள்ளையாகிய நான், அவள் தலையின் மேல் என் கரங்களை வைத்துகொண்டு நிற்கிறேன், தெய்வீக இரக்கத்திற்காகவும், உதவிக்காகவும் கேட்கிறேன். நீங்கள் அவளுக்கு அருள் செய்வீர் அல்லவா? இப்போதும், மகா பெரிய தேவனின் தூதனே, நீங்கள் இங்கே அவளிடம் நெருங்கி இருப்பீர்கள் என்றால், அவளுடைய இருதயத்தை அறிந்து, மற்றும் அவளுடைய வாழ்க்கையில் நடந்த காரியங்களை அறிந்து, அவைகளை அவளுக்கு நேரே கொண்டுவந்து நிறுத்தும்படி கேட்கிறேன். ஓ தேவனே, நிச்சயமாக அவளுடைய விசுவாசம் உயர்த்தப்பட்டு மேலும் அவள் முழுமையான, குணத்தோடும் செல்லட்டும். மேலும் உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்தை கேளும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கேட்கிறேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சகோதரியே. உங்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய, சில தினங்களில் உங்களிடம் இருந்து பதில் எதிர்பார்க்கிறேன். இப்போது பாருங்கள், சந்தேகப்பட வேண்டாம். சந்தோஷமாக ஆர்ப்பரித்து கொண்டே செல்லுங்கள். 24. இப்போது இங்கிருக்கும் ஒவ்வொருவரும், ஒரு சிறு துளி அவநம்பிக்கை உடையவராக இருப்பீர்கள் என்றால், இயேசு கிறிஸ்துவே உங்கள் இரட்சகர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும், காரணம் அவநம்பிக்கை ஒரு பாவம். இப்போது, எனக்கு தெரியாது.......இப்போது பாருங்கள்? என்னால் அந்த பெண்ணை சுகம் பெற செய்து இருக்கவே முடியாது, அவள் சுகமாவாள் என்று நம்புகிறேன். அந்த பெண் இருக்கும் இடத்தை சுற்றி ஒரே வெளிச்சமாக இருந்தது. நான் அந்த பெண் சரியாகி விடுவாள் என்று நம்புகிறேன். இப்போது பயபக்தியாக இருங்கள். மற்றும் இந்த சிறு பெண்ணா என்று பார்ப்போம்? நீங்கள் தான் எதிர்பார்க்கப்பட்ட அந்த நோயாளியா? மற்றும் இருக்கபோகிற.....செல்லுங்கள்........இப்போது இயேசு கிறிஸ்துவை பற்றின உங்கள் அபிப்ராயம் என்ன? சென்ற நாட்களில் இருந்த அதே இயேசு கிறிஸ்து தான் இப்பொழுதும் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? நீங்கள் அப்படி தான் நினைக்கிறீர்கள்? நல்லது, அவர் அப்படிதான் சகோதரியே. இந்த உலகம் அதை பற்றி என்ன சொன்னாலும், அது ஒரு காரியமே இல்லை. அது அப்படிதான்_ ஒன்றுமே இல்லை....ஒரு பரிசுத்த தேவனுடன் இருந்து கொண்டு, ஒரு வேறுபட்ட இந்த உலகத்தோடு _ உலகத்தோடு வாழ, எதிர்பார்க்க முடியாது. மற்றும் உலக பிரகாரமான நண்பர்களுடன் சாவகாசமாக வாழ முடியாது. அப்படி உங்களால் வாழ முடியுமா? உங்களால் அதை செய்ய முடியாது. மற்றும் தேவன், ஒரு நீதிமான் மீது தம்முடைய கோபத்தை ஊற்றி, அவருடைய நியாத்தீர்ப்பு கூற முடியாது. நியாதீர்ப்பு வருவதற்கு முன்னால் அவர்கள் இந்நாளில் தங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். பாருங்கள்? மற்றும் இவை எல்லாம் தேவனுடைய கரங்களில் சரியாக நடந்துகொண்டு இருக்கின்றன. 25. நான் உங்களிடம் சற்று பேச விரும்புகிறேன். பாருங்கள்? அந்த காரணத்தினால் தான், நான் உங்களிடம் பேசுகிறேன். எல்லாமே சரியாக தேவனுடைய கரங்களுக்கு நேராக நடக்கிறது. மற்றும் சாத்தான் இந்த உலகத்தில் ஜனங்களை கட்டி போட்டிருந்தாலும், தேவன் எப்படி இருக்கும் என்று சொன்னாரோ, அது போல தான் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் அது அப்படிதான் இருக்க வேண்டும், பார்வோனை போல அதேவிதமாகத்தான் இருக்கும். ஆனால் நமது தேவன் நம்மை மிகவும் நேசிப்பவராக இருக்கிறார். மற்றும் அவர் நம்முடைய இரட்சகராக கண்டுகொண்டதற்காக நன்றி உள்ளவர்களாக இருக்கிறீர்களா? மற்றும் அதே போல அவரை நேசிக்கிரீர்களா? மற்றும், இப்போது, இந்த சரீரம் என்றோ ஒரு நாள் புழுதியில் செல்லும் போது, நித்திய ஜீவனுக்கு சென்று என்றைக்கும் வாழ்வோம், என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டாகிறது. அது சரிதானே. மற்றும் ஏதோ ஒரு நாளில் நீங்கள் மீண்டும் எழுந்து, ஒரு வாலிப பெண்ணாக இருப்பீர்கள் . ஆமாம் அம்மையாரே, அப்படிதான் இருப்பீர்கள். நல்லது. அது தேவனுடைய வார்த்தை, அது மீண்டும் வரும், மற்றும் நீங்கள் 21, அல்லது 22 வயதில் இருந்தது போல என்றென்றும், அப்படி இருப்பீர்கள். நீங்கள் ஒரு தூதனை போல திரும்ப இப்போ வரமாட்டீர்கள். தேவன் தூதர்களை படைத்தார், ஆனால் உங்களையோ பெண்ணாக படைத்தார். பாருங்கள்? மற்றும் நீங்கள் கண்டிப்பாக............உயிர்த்தெழுதல் அதை கொண்டு வரும், வேற எதையும் அதின் இடத்தில் போடாது _ வேறெதையும் அதை போல உண்டாகாது, ஆனால் அதே ஒன்றை தான் கொண்டு வரும். பாருங்கள்? ஆகையால் நீங்கள் ........அப்படி தான் இருப்பீர்கள். 26. மற்றும் _ நீங்கள் ............ இருக்கிறீர்களா என்பதை அறிவதற்காக நான் உங்களிடம் பேசி கொண்டிருக்கிறேன். நமது ஆண்டவர் கிணற்றண்டையில் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததை போல.... உங்களுக்கு புரிகிறதா? அதை ............ படித்திருக்கிறீரகள். உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அப்படித்தானே? உங்களுக்கு....?......இருந்தது. மூல வியாதி. அது உண்மை தானே? ஆமாம் ஐயா. இப்போது வேறே எதுவுடனோ கஷ்டப்பட்டுக்கொண்டிருகிறீர்கள். கல்லீரலின் கற்களால் [அஹா, அஹா] மற்றும் ஒரு சிறு நீரக பிரச்சனை . மற்றும் நீங்கள் ....... [அந்த பெண் சகோதரன் பிரன்ஹாம் உடன் இந்த நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறாள் _ ஆசி] ஆமாம் அம்மையாரே, அது உண்மை? நான் சொல்கிறேன் அது தான் உண்மை, அப்படித்தானே? ஆமாம் ஐயா. நல்லது, இப்போ நான் _ சற்று _ சற்று, நீங்களும், நானும் சற்று மீண்டும் பேசலாம். பாருங்கள்? உங்களுடைய பிரச்சனை என்னவென்று உங்களிடம் நான் சொல்லிக்கொண்டு இருக்கையில், நீங்கள் ஏதோ ஒன்றை சொல்லுவதற்கு முற்பட்டபோது ஒரு........நான் அது கடந்து செல்வதை பார்த்தேன், மற்றும் அது என்னிடம் பேசும் போது, நானும் பேசினேன். மேலும் அதற்கு பிறகு நீங்கள் பேசினீர்கள், அது என்ன வென்று அறிவதற்கு முன்னால் நீங்கள் ஏதோ சொன்னீர்கள். ஒருவேளை அவர் வேறே ஏதாகிலும் எனக்கு காட்டுவார். அதனால் உங்கள் விசுவாசம் அதற்கு நேராக விருத்தியாகும் (நீங்கள் பாருங்கள்) நான் _ நான் நீங்கள் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றும் என்னால் _ ஒன்றுமே செய்ய முடியாது.நிச்சயமாக, நீங்கள் உங்கள் கண்களுக்கு மேல் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அரங்கத்தில் உள்ளவர்கள் அதை பார்க்கலாம். நான் ஒரு வேலை, "அங்கே ஒரு சப்பாணி உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்று சொன்னால், ஏன், அவர்கள் அது உண்மை என்று நிச்சயமாக சொல்வார்கள், அதில் எந்த வித ரகசியமும் கிடையாது. அந்த பையன் சப்பாணி என்று எல்லோரும் பார்க்கின்ற போது தெரிகிறது. ஆனால் பாருங்கள், நீங்கள் சுகத்தோடு, நலமுடன் இருக்கிறீர்கள்...... நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தேவனுடைய தீர்க்கதரிசி என்று நம்புகிறீர்களா? தேவன் உண்மையிலேயே இங்கிருந்து இந்த காரியங்களை எனக்கு வெளி படுத்திக் கொண்டிருகிறார் என்று நம்புகிறீர்களா? நன்றி சகோதரியே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு நம்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆமாம், இதோ இன்னும் ஒரு காரியம். உங்களுக்கு ஒரு கணவர் உண்டு, அவர் சுகவீனராக இருக்கிறார். அப்படித்தானே? அவருக்கு இருதய கோளாறு உண்டு. அது உண்மை தானே? அது உண்மை என்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது சரி. இப்போது, இரண்டு பேரும் வீட்டிற்கு சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணம் அடையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மற்றும்..........செல்லுங்கள். ஆமாம் அம்மையாரே. நன்றி. மற்றும்....... 27. எல்லோரும் உண்மையாகவே, பயபக்தியாக இருங்கள். பாருங்கள்? என்ன....அந்த பெண்மணி.....சிலநேரங்களில், அது......இந்த கூட்டத்தில் நேரே அபிஷேகத்திற்குள் எப்படி செல்ல வேண்டுமோ அப்படி நான் செல்ல முடியவில்லை. அரங்கத்தில் உள்ளவர்களை அங்கும் இங்குமாக அசைத்தது, பின்பு சென்றது. அது....... ஆனால் அது என்னவாக இருக்கும் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அந்த பெண் பேசிக் கொண்டே இருந்தாள், மற்றும் _ மற்றும், என்னை முந்தி கொண்டே பேசினாள் (நீங்கள் பாருங்கள்?) மற்றும் என்னுடன் பேசி கொண்டிருந்த, அது, என்ன சொல்கிறது என்று கேட்க முற்பட்டேன், ஆனால் அந்த பெண் பேசிக்கொண்டே இருந்தார்கள். நீங்கள் நீண்ட நேரம் பேசினாள், நிச்சயமாக நிறைய காரியங்கள் நடக்கும். நமக்கு நமக்கு அது தெரியும். கர்த்தர் ஆசிர்வதிக்கவேண்டும் என்பது தான் என்னுடைய தாழ்மையான ஜெபம். 28. எப்படி இருக்கிறீர்கள் பெண்ணே? நீங்கள் இன்றிரவு இந்த பரலோகத்தின் விதானத்தின் கீழ் நின்றுக் கொண்டிருக்கிறீர்கள், என்று நம்புகிறீர்களா? அந்த நட்சத்திரங்களை உண்டாக்கி, அதை அப்பால் மின்ன செய்த அந்த ஆண்டவர் உங்களை கீழே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? அவருடைய திட்டத்தின் கீழ் நாம் இன்று இருக்கிறோம் என்று நம்புகிறீர்களா? எல்லா இடத்திலும் இருக்கின்ற, தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறீர்களா? இன்று, நோவா காலத்தில் நடந்ததை போல, ஜனங்கள் பெண் கொண்டும், பெண் கொடுத்தும், ஒழுக்கமற்ற உடைகளை உடுத்திகொண்டும், அவர்கள் செய்வது போலவே நடித்து கொண்டு இருக்கும், இந்த காலத்தில், அவர் ஒரு அசைவை துவங்கி இருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? இந்நாட்களில் அவர் ஒரு _ ஒரு செய்தியை அனுப்பிக் கொண்டிருப்பதை, குற்றம் கண்டுபிடித்து, கேலி செய்து, அந்நாட்களில் நடந்தது போல சரியாக இந்நாட்களில் நடப்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அது தான் நடக்கும் என்று அவர் சொன்னார். நாம் முடிவுக்கு அருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. அப்படி தானே? ஓ தேவன் உங்களை சுகப்படுத்துவதற்காக இங்கிருக்கிறார் _ என்று உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் நம்புகிறீர்கள்? நாம் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் அல்லவா? அப்படித்தானே? எனக்கு உங்களை தெரியாது. ஆனால் நான்_உங்களிடம் பேசுவதற்கு காரணம் ஏதாவது ஒன்று செய்ய முடியுமா என்று பார்பதற்கு தான். அதாவது.............நீங்கள் இங்கு தான் வாழ்கிறீர்கள்? அப்படித்தானே? ஓ, ஆமாம் அம்மையாரே, எல்லாம் நல்லது, அப்புறம், இந்த பூமியில், நாம் இது தான் முதல் முறையாக சந்திக்கிறோம், நாம் முதல் முறையாக இந்த பூமியில் பார்த்து இருக்கிறோம்..............இப்போது, நீங்கள் ஒரு கிறிஸ்துவர் என்று எனக்குத் தெரியும். இப்போது, வேறொரு பட்டணத்தில் இருந்து இதோ இங்கு ஒரு கிறிஸ்தவள் இருக்கிறார். இன்றிரவு, நியாதிபதியாக இருக்கும் நம்முடைய சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு முன்பாக சொல்லுகிறேன், இந்த பெண்ணை நான் என் வாழ்கையில் பார்த்ததே இல்லை. மற்றும் எங்களுக்கு தெரிந்த மட்டில், அவளும் என்னை பார்த்ததே இல்லை. நாங்கள் உண்மையிலேயே அந்நியர்கள். அவள் இந்த நடை மேடைக்கு வரவும். நல்லது. 29. இப்போது, பரிசுத்த ஆவியானவர், ஒருவேளை நான், தேவனை பற்றி உண்மையாய் பேசியிருந்தால், மற்றும் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு சுகமாக்க முடியாது. அவருக்கு, பிதா என்ன காண்பித்தாரோ அதை மாத்திரம் செய்தார். ஆனால் ஜனங்களின் இருதயத்தை அறிந்திருந்தார், மற்றும் அவர்கள் எதை பற்றி நினைக்கிறார்களோ, என்ன (அது சரிதானே) _ மற்றும் அவர்கள் என்ன செய்தார்கள், என்று அறிந்திருந்தார். பாருங்கள்? சரி, ஒருவேளை அவர், இந்த பெண்ணிடம் நீங்கள் எனது _ எனது சகோதரி, மற்றும் ஏதாவது அவளுடைய வாழ்கையை பற்றி பேசினார் என்றால், அதை அது சுட்டிக்காட்டும் அல்லவா. அது என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது. எனக்கு அவளை தெரியாது. ஆனால் ஏதாவது அவள் வாழ்க்கை பற்றி அறிந்தால், அவர் இந்த இரவு இங்கு, இருக்கிறார் என்பதை _ நேராக சுட்டிக்காட்டும் அல்லவா? அது சரியாக நேரே சுட்டிக்காட்டும் அல்லவா? மற்றும் நான் உங்களை போல ஒரு சாதாரண மனிதன் என்று உங்களுக்கு தெரியுமோ? ஆனால் சபை.... உங்களிடம் என்ன கூற விரும்புகிறேன், இந்த சிறு கூட்டத்திற்கு, கர்த்தர் ஆசீர்வாதத்தை கொண்டு வருவார் என்றால், மேலும் உண்மையாக அமர்ந்து, அதை புரிந்து கொள்வார்கள் என்றால், ஜனங்கள் சென்று, அதை எப்படி மற்றவர்களை நேரே வழிநடத்துவது என்று அறிவார்கள். நீங்கள் பாருங்கள்? மற்றும் அபிஷேகம் இந்த கட்டிடம் முழுவதும், வாரிக்கொண்டு போகும் போது, ஜனங்கள் பேசுவதை கேட்கும் போது, மற்றவர்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் பாருங்கள்? புதிதாக வருபவர்களுக்கு தான் புரியாது. 30. இப்பொழுது, அந்த பெண் ஒரு கிறிஸ்தவளாக இருக்கும் பட்சத்தில், இங்கே, நாங்கள் சர்வ வல்லமையுடையவர் முன் நின்றுக்கொண்டு, அவருடைய வேதாகமம் இங்கே இருக்கையில், அவர் எங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒருவரை பற்றி ஒருவருக்கு ஒன்றுமே தெரியாது. நாங்கள் சும்மா நின்றுக் கொண்டிருக்கிறோம். இப்போ கர்த்தருக்கு எங்கள் இரண்டு பேர்களை பற்றியும் தெரியும். அப்படித்தானே? அவருக்கு எங்கள் இரண்டு பேரையும் தெரியும். எங்களுடைய பெயர்கள் அவருடைய புத்தகத்தில் எழுதி இருக்கிறது. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நமது சகோதரியிடம் இங்கிருந்து பேசுவார், அதற்கு பிறகு நம் எல்லோருக்கும் எந்த வித சந்தேகமும், இதற்கு மேல் இருக்காது. இருக்குமா? நாம், அது _ அது உண்மை என்று மட்டுமே சொல்ல முடியும். 31. அவளிடம் நான் சற்று பேச விரும்புகிறேன். மற்றும் இப்போது, எனது அருமை சகோதரியே, சில நேரங்களுக்கு முன், நான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்தது போல, நான்_ நான் உங்களிடம், தொடர்ந்து பேச விரும்புகிறேன். நீங்கள் அநேக முறை வேதாகமத்தை படித்து இருக்கிறீர்கள். மற்றும் அவர் எப்படி பேசுவார் எனபதை பாருங்கள். ஒரு முறை அவர் பேதுருவிடம், அவர்கள் வரிப்பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர் என்று சொன்னார். அவர் சொன்னார், "இப்பொழுது நீ போய், உன் தூண்டிலை தண்ணீரில் போடு, முதலில் அகப்படும் மீனை பிடித்து வா, அதின் வாயில் ஒரு _ ஒரு பணம் இருக்கும்" என்று. நான் _ நான் அது எப்படி நடக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்? நாம் சொல்வது போல, அது நடப்பதற்கு அவர் எந்த _ எந்த பரிமானதிற்குள் சென்றிருப்பார்? இப்பொழுது அவரே அதை விளக்குகிறார். அவர் சொன்னார், "பிதா எனக்கு காண்பித்தார்." என்று. அது சரியா. இப்போது, அந்த பரிதாபமான மீனுக்கு அது தெரிய வில்லை. அது மேலே சென்று அந்த தூண்டிலை பிடித்துக்கொண்டது, ஏனென்றால் தேவன் அதை அங்கு செல்ல வழி நடத்தினார். மேலும் ஆண்டவர் ஏற்கனவே அதனிடம், தான், அங்கு வருவதாக சொல்லியிருந்தார். பாருங்கள்? அவர், பிதா என்னிடம் காண்பிக்காமல்.....,.....நான் ஒன்றுமே செய்வதில்லை என்று சொன்னார். பாருங்கள்? இப்போது, நம் பிதா இன்றும் அதே தேவன், இல்லையா? நாம் இன்னும் அவரது குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் இருக்கிறோம். அவரது ஒரேபேறான குமாரனின் கிருபையின் மூலம், நாம் அவரது குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆக்கப்படுகிறோம்; மேலும் அவரது ஆவியானவர் தம் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று, அவர் மீண்டும் வரும் வரை அதே காரியத்தைச் செய்து, நம்மோடு, நம்மில் இருக்க வேண்டியிருந்தது. அது அற்புதமானது அல்லவா? 32. நீங்கள் _ உங்களுக்கு _ கொஞ்சம் பிரச்சனைகள் உண்டு. அது ஒரு சிறு நீரக பிரச்சனை மற்றும் சிறு நீரக பையின் காரியம். அது சரிதானே? அது ........மற்றும்? கவனியுங்கள். ஏதோ ஒன்றை குறித்து நீங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறீர்கள். இந்த அரிப்பு உங்கள் மேல் எப்பொழுதும் வந்துகொண்டிருக்கும். அது சரி தானே? நீங்கள் அதை சொரிந்து கொண்டும், தேய்த்துக் கொண்டும் மற்றும் அது போல காரியங்களை செய்வதை நான் பார்க்கிறேன்.அது ஒரு தேனி கூடு போல இருக்கிறது, அது ஒன்றுமில்லை, உங்கள் சிறு நீரகத்தின் அமில தன்மையினால் உண்டாகிறது. அது சரிதானே. முக்கியமா அது காலை நேரங்களில் கொஞ்சம் அதிகமாக ஏற்படுகிறது என்பதை பார்கிறேன். மற்றும் அது சரிதானே? நான், நீங்கள் அந்த பாத்திரங்களை கழுவும் போது, அல்லது அது போல ஏதோவொன்று கழுவும் போது, நீங்கள் சுற்றி திரும்பி தேய்த்து கொண்டதை நான் பார்த்தேன் _ எனக்கு தெரியும் _ அது காலை நேரங்களில் ஏற்படுகிறது. நீங்கள் பாருங்கள்? ஆமாம் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கரங்களை தண்ணீரில் போடும் போது அது உங்களை வேதனை படுத்துகிறது. ஏன் அது உங்களை வேதனை படுத்துகிறது, ஆமாம் ஐயா. அது அற்புதம் அல்லவா, அவர் அதை பற்றி சொல்லுவார்? அது தானே உண்மை? இப்போது, அது உண்மை என்றால், சபையாரிடம் திரும்பி, அது உண்மை என்று உங்கள் கரங்களை உயர்த்தி சொல்லுங்கள். இப்போது, நான் சொல்வதை கேட்டீர்கள் _ நான் பேசினதை கேட்டீர்கள் , அப்படித்தானே. ஆனால் அது நான் அல்ல. இல்லை, அது நான்..........சொல்லுங்கள், நீங்கள் _ நீங்கள் _ நீங்களும், நீங்களும் கூட........உங்கள் பக்கத்தில் ஒரு மனிதன் தோன்றுவதை நான் பார்க்கிறேன்; அது உங்கள் கணவர். அவருக்கும் சுகம் தேவை படுகிறது. அப்படித்தானே? அது ஒரு பிளவு? அது சரி தானே? அது சரி என்றால் கரங்களை உயர்த்துங்கள். அஹா, அஹா. எங்கள் _ எங்கள் பரலோகத்தின் பிதாவே, அந்த இரண்டு பேர்களுக்காகவும், ஜெபிக்கிறேன். அந்த பெண்ணை இங்கிருந்து இந்த இரவு அனுப்பி வைக்கவும், அவள் வீட்டிற்கு சுகம் பெற்று செல்லட்டும், அவளும் அவள் கணவரும் சுகம் பெற்று அநேக வருடங்கள் சந்தோஷமாக வாழட்டும். அந்த உடம்பில் உள்ள அந்த வியாதியும், உபத்திரவங்களும் சபிக்கப்படுவதாக, மற்றும் உம்முடைய மகத்துவமான ஆவி, அவர்கள் இரண்டு பேரையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் அளிப்பாராக, ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. 33. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவோமாக. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்." கர்த்தர்.......இருக்கிறார். "ஆண்டவர்" என்னும் வார்த்தைக்கு வணங்கப்படும் பாத்திரம் என்று அர்த்தம் கொள்ளும். பாருங்கள்? மேலும் தேவன், தம்மை வணங்க வேண்டும் என்று விரும்புகிறார். இயேசு சொன்னார், "தேவன் ஆவியாய் இருக்கிறார், மேலும் அவரை வணங்குபவர்கள், என்னவாக வணங்க வேண்டும்?" ஆவியோடும், உண்மையோடும் வணங்க வேண்டும். உண்மை. உண்மை என்றால் என்ன? அவர் சொன்னார் "நானே சத்தியமாய் இருக்கிறேன்." மற்றும் இங்கே, இந்த இரவு, அவர் நம் மத்தியில் ,சத்தியமாக இருக்கிறார், அவருடைய பிரசன்னத்தை, ஆவியானவர் நிரூபிக்கிறார். அவர் ஆவியாகவும், உண்மையாகவும் இருக்கிறார். அந்த பெண், "அது தான் உண்மை." என்று சொல்கிறாள். அந்த ஆண், "அது தான் உண்மை" என்று சொல்கிறார். அப்போது, அது தான் உண்மை. அதை சந்தேகிப்பதற்கு, உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? எல்லாம் சரி, நீங்கள் வருவீர்களா? நான் ஜெபித்துக்கொண்டு இருக்கும் போது, உங்களால் இயன்றவரை பயபக்தியாக இருங்கள். ஒவ்வொருவருவரோடும், நான் அதிக நேரம் எடுக்கிறேன் என்பதை அறிகிறேன், ஆனால் நான் _ என்னால் இயன்றவரை, எவ்வளவு பேர்களுக்கு ஜெபிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக ஜெபிக்க துரித படுகிறேன். நீங்கள் மட்டும் சற்று ...... நேரம் கடந்து சென்று கொண்டே இருக்கிறது. மற்றும் முடிப்பதற்கு 5 நிமிடங்கள் தான் இருக்கிறது, ஆகையால் இப்போது, உண்மையாக பயபக்தியோடு இருங்கள். மேலும் இந்த வழியாக பாருங்கள். எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் . நான் உங்களுடைய சகோதரன், 34. இப்போது.......... அங்கே இருக்கிற நீங்கள் நம்புவீர்கள் என்றால் நீங்கள் சுகம் பெறுவீர்கள். நம்பிகொண்டே இருங்கள். மற்றும், இப்போது, கர்த்தர் மேல் விசுவாசம் வையுங்கள். எப்படி இருகிறீங்கள் சகோதரியே? உங்கள் முழு இருதயத்தோடே நம்புவீர்களா? நீங்கள் நம்புவீர்களா? நல்லது, அதை அறிந்த, எனக்கு மிகுந்த சந்தோஷம். உங்களிடம் அநேக காரியங்கள் தவறாக இருக்கின்றது. இரத்த சோகை, ஆஸ்துமா _ நீங்கள் சற்று உடைந்து போய் விட்டீர்கள். அது சரிதானே? எல்லாம் பெலவீனமும் மற்றும் சிக்கல்களும். அது உண்மை தானே? அது தான் அவர் சொன்னார், எப்படியாயினும் சரி. இங்கே கொஞ்சம் வாருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரியே. ஓ பிதாவே, இந்த வயதான ஏழை கரங்கள் என் கரங்களுக்குள் இருக்கும் போது, அது அநேக அழுகும் குழந்தைகளின் கண்ணீரை துடைத்து, முதுகை தடவி, தொட்டிலில் தாலாட்டியதை அறிவீர். இளமையின் நாட்களில், அந்த குழந்தை அடிபட்டு அம்மா என்று ஓடி வரும், மேலும் நீங்கள் அக்குழந்தையை முத்தமிட்டு, கண்ணீரை துடைத்து, தாலாட்டும் போது, எல்லாம் சரி ஆகிவிடும். ஆனால் கர்த்தாவே, உங்கள் கரங்களால் இந்த இரவு கண்ணீரை துடைத்து, மற்றும் அவர்கள் பிரச்சனையை துடைத்து போடுவார். கர்த்தாவே, உங்களால் அதை செய்ய முடியும். அதை அருளும் படி ஜெபிக்கிறேன். இன்றிரவு அவள் சுகம் பெறட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் பெறுவதற்காக நான் அவள் மேல் என் கரங்களை வைக்கிறேன். ஆமென். சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சந்தோஷமாக, களிகூர்ந்து செல்லவும். தேவனுக்கு நன்றியுள்ளவளாக செல்லுங்கள். அப்பொழுது சுகம் பெறுவீர்கள். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம் _ உண்டாவதாக " என்று நாமெல்லோரும் சொல்லலாம். 35. பெண்ணே வாருங்கள். சகோதரியே, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்கள் பிரச்சனை என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்றால், ஒரு காரியம், உங்களது சுகத்தை ஏற்றுகொள்வீர்களா? உங்களுக்கு ஒரு கட்டி இருக்கிறது. அது சரிதானே? நல்லது. எல்லாம் நல்லது. இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் நம்பி செல்லுங்கள், சுகத்தை பெறுவீர்கள். தேவனே, நான் ஆசீர்வதிக்கும் இந்த பெண்மணியை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் சுகமாகட்டும். ஆமென். எல்லோரும் விசுவாசத்தோடு இருங்கள். இருக்கும். பாருங்கள்? அது சரி செய்தது. பாருங்கள்? அவள் சொன்னாள், "அவர் எனக்கு எல்லாவற்றையும் சொன்னார் நான்....."ஆனால் அவர் அப்படி அல்ல; அவர் ஒரே ஒரு காரியம் மட்டும் சொன்னார். தேவன் அவருக்கு எல்லாவற்றையும் காண்பித்து இருப்பார் என்றால் அவர் அவளுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருப்பார். ஆனால் அவர் மாத்திரம் உங்கள் குடும்ப பிரச்சினையோ அல்லது உங்கள் கடந்த வாழ்கையை பற்றியோ அல்லது வேறெதுவாக இருந்தாலும், உங்கள் பிரச்சனை என்னவென்று மட்டும் சொல்வார் என்றால், இந்த இரவு அவர் உங்களை சுகமளிப்பவர் என்று ஏற்றுக்கொள்வீர்களா? இந்த உலகத்தில் இருக்கும் மிக அபாயகரமான நோயில் ஒன்று தான் உங்களுக்கு இருக்கிறது. மற்றவை காட்டிலும் அநேகரை கொல்ல கூடியதாக இருக்கிறது: அது தான் இருதய நோய். அது சரிதானே? உங்கள் சுகத்தை இப்போது ஏற்றுக்கொள்வீர்களா? கர்த்தராகிய இயேசுவே, நம் சகோதரியை நீங்கள் சுகமாக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அவள் இங்கிருந்து இந்த இரவு செல்லும்போது சுகத்தை பெற்றுக் கொள்ளட்டும்: இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். இப்போது, நீங்கள் நம்புவீர்கள் என்று என்னிடம் வாக்கு கொடுத்ததை அறிவீர்கள் அல்லவா? இப்போது நீங்கள் சுகம் பெற்றதற்காக தேவனுக்கு நன்றி சொல்லி களிக்கூர்ந்து செல்லுங்கள். அதற்கு அது தான்வழி _ அப்படிதான் நீங்கள் சுகத்தை பெறுவீர்கள், நீங்கள் சுகம் பெற்றதற்காக தேவனை துதித்துக் கொண்டே செல்லுங்கள். 36. எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே. அவள் நம்பினது போலவே நீங்களும் அதே விதமாக நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா? உள்ளே, அங்கே யாரோ ஒருவருக்கு இரத்த கோளாறு உள்ளது. அங்கே சரியாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் சகோதரியே உங்களுக்கு தான் அப்படி உள்ளது என்று நான் நினைக்கிறேன். அது சரிதானே, சகோதரியே. அது ஒரு விதமான இரத்த சோகை அல்லது _ அல்லது? அது சரி தானே? நான் உங்களை பார்த்து இருக்கிறேன். வெளிச்சம் உங்கள் மேல் வந்து தொங்கிக் கொண்டிருக்கிறது, அது இரத்தம் சொட்டி கொண்டே இருப்பது போல உள்ளது. ஆமாம், எழுந்து நிற்கவும். சகோதரியே, நீங்கள் அங்கேயே சுகம் பெற்றீர்கள் என்பதை நான் நம்புகிறேன். சகோதரியே அந்த நிமிடமே அவர் உங்களுக்கு சுகம் தந்தார் என்பதை நான் நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் அதை பார்க்க முடிகிறது. அது எந்த இடத்தில் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அது ஒரு விதமான இருள் சூழந்த விதமாக அங்கு இருந்தது, மற்றும் அது என்னவென்று எனக்கு சொல்ல முடியவில்லை. அவர் இரண்டு முறை அசைத்தார். அது இந்த மேடையில் இருந்து வெளியே சென்று, சரியாக அந்த பெண்ணின் மேலே தொங்கிக் கொண்டிருந்தது, மேலும் இரத்தம் ஓடுவது போல இருந்தது. அது என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை. இங்கே நின்றுக்கொண்டு, உங்களை பார்க்க கடினமாக இருந்தது, காரணம் அது ஒரு விதமான இருள் போல அங்கு இருந்தது. ஆனால் நான்.......... இப்பொழுதும், சகோதரியே, பரிசுத்த ஆவியானவர் இங்கே நின்று, அந்த பெண்ணுக்கு _ என்ன பிரச்சினை என்று சொல்ல முடியும் என்றால், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று அவருக்கு சொல்ல முடியும் என்றால், நீங்கள் சுகம்பெற்றதை நம்பி, அதை ஏற்றுக் கொள்வீர்களா? அதின் மேல் _ அந்த அடிப்படையில், சொல்லுங்கள், முதலாவது தேவனுடைய வார்த்தை அவ்வாறு சொல்கிறது. அடுத்ததாக, "என்னை தான்" என்று பரிசுத்த ஆவி அர்த்தம் கொண்டு, திடப்படுத்துகிறது. அது சரிதானே? அப்பொழுது அது உங்களுடைய காரியமாக இருக்கும். அது சரிதானே? அது உண்மை தானே? அது நீரிழிவு நோய். நல்லது. அது சரிதானே? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சென்று, சுகமடையுங்கள். 37 சரி, சகோதரனே வாருங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா, ஐயா? தேவன் வெறுமனே பேசி, உங்களிடம் என்ன தவறு இருந்தது என்று கூறினால், நீங்கள் உங்கள் சுகமளித்தலை விசுவாசித்து ஏற்றுக்கொள்வீர்களா? அதன் அடிப்படையில், முதலில் தேவனுடைய வார்த்தை அவ்வாறு கூறுகிறது என்று கூறுங்கள். அடுத்த காரியம், பரிசுத்த ஆவியின் உறுதிப்படுத்துதல் "என்னை" என்று பொருள்படும்." அது சரியா? பின்னர் அது உங்கள் விஷயத்திற்காக இருக்கும். அது சரியா? அது உண்மையா? நீரிழிவு நோய். அது சரிதான். அது சரிதானா? கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். பின்னர் சென்று குணமடையுங்கள். பிதாவே, இயேசுவின் நாமத்தில் அந்த மனிதனை நீங்கள் குணப்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அவன் இதற்கு மேல் இன்சுலின் எடுக்கவே வேண்டாம். அவன் சரியாக இப்போதே குணமாகட்டும், மேலும் அவனுடைய மருத்துவர் அவன் சுகம் அடைந்து விட்டான் என்று கூறட்டும். இயேசுவின் நாமத்தில். சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் .எல்லாம் சரி ஐயா. 38. உங்கள் முதுகு எலும்பு பிரச்சனை, அப்படித்தானே சகோதரியே? எல்லாம் சரி, ஐயா, இப்போது சென்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், குணமடையுங்கள். தேவன் மேல் விசுவாசம் வையுங்கள். உங்களால் அவரை நம்பமுடியுமா? வெளியிலுள்ள யாராவது அவரை நம்புவீர்கள் என்றால், தேவன் அதை கைகூடி வரபண்ணுவார். விசுவாசம் மட்டும் வையுங்கள். இப்பொழுதே உங்கள் விசுவாசம் விருத்தியாகட்டும், மேலும், "தேவனே, நீங்கள் இங்கு இருக்கிறீர்" என்று சொல்லுங்கள். தேவனை பற்றி எனக்கு ஏதாவது தெரியும் என்றால், நான் அவருடைய ஊழியக்காரன் என்று சரியாக நீர் நியாயந்தீர்ப்பீர்கள் என்றால், பரிசுத்த ஆவியானவர், அரங்கில் உள்ளவர் மீது இப்போழுது அசைவாடிக் கொண்டிருக்கிறார், பாருங்கள்? எதுவென்றாலும் நடக்கலாம். ஒரே ஒரு காரியம் மட்டும் நீங்கள் செய்ய வேண்டும், அது விசுவாசிப்பதே ஆகும். எல்லாம் சரி, வாங்க பெண்மணி. நீங்கள் அங்கே ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருப்பதை, நான் பார்க்கிறேன். நீங்கள் நம்பியிருந்தால், நீங்கள் இங்கே வருவதற்கு முன்பே, உங்கள் கட்டி உங்களை விட்டு நீங்கி இருக்கும் என்று சொல்லியிருப்பேன். நீங்கள் அதை நம்புவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். சென்று உங்கள் சுகத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். வாருங்கள். 39. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், வாலிப பெண்மணி. நீங்கள் அனுபவிக்கும் வேதனைக்கு, நீங்கள் மிகவும் சிறிய பெண். உங்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளது; அது _ அது குழந்தை பருவத்தில் (உண்மை தானே) வந்தால், அது மிகவும் கடினம். ஆனால் இயேசு இப்பொழுது, இங்கு நிற்கிறார் என்பதை நம்புகிறீர்களா? இந்த மேடையில் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? உங்கள் சுகத்தை பெற்றுக்கொள்ளுங்கள், இப்படி சொல்லுகள், "தேவனாகிய கர்தாவே, நான் இங்கு சுகம் பெற போகிறேன் "நீங்கள் அதை செய்யுங்கள்? கர்த்தராகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அந்த நீரிழிவு நோயை கடிந்துக்கொள்கிறேன். இந்த பிள்ளையிடம் இருந்து அது நீங்குவதாக. அவள் சுகம் பெற்றுக் கொள்ளட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். என்னை கூப்பிடுங்கள். எல்லாம் சரி, நிச்சயமாக உங்கள் முதுகு பிரசேனை, ஐயா. மற்றும் சென்று, சுகம் அடையுங்கள். மற்றும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், சென்று அதை செய்யுங்கள்.............எல்லாம் சரி. நாம் எல்லோரும், "கர்த்தருக்கு நன்றி" என்று சொல்வோமாக. ஆமென். இப்பொழுது விசுவாசம் வையுங்கள். சந்தேகபடாதேயுங்கள். மற்றும்-மற்றும் கர்த்தர் அதை நடத்தி காட்டுவார். ஆமென். எல்லாம் சரி. வாருங்கள் பெண்மணி. நீங்களே, உங்களுக்கு இருக்கும் ஆஸ்துமாவிலிருந்து சுகம் பெற வேண்டும் என்று இருக்கிறீர்கள். அப்படித்தானே? உங்களுக்கு ஒரு சிறு பிள்ளை இருக்கு, அதுவும் சுகம் பெற விரும்புகிறது? சென்று, இருவரும் சுகம் பெறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சென்று சுகம் பெறுங்கள். "தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று எல்லோருமாக சொல்லுவோம். உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் செல்லலாம். 40. இப்பொழுது, கர்த்தர் இங்கே இருந்து உங்களுக்கு சுகம் தர போகிறார் என்று நம்புகிறீர்களா........? தொடர்ந்து செல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சுகமாடையுங்கள்... ஆமாம் ஐயா, இருவருமே. தேவனுடைய நாமத்தில் இருவரும் குணமடைந்து செல்லுங்கள். ஐயா, பின்பாக்கம் ஒரு மனிதன் உட்கார்ந்துகொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன். அங்கு ஒரு கருப்பு வட்டம் உண்டு. அவர் இங்கே சரியாக என்னை நோக்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரியாக பின்னாலே, வரிசையில் இரண்டாம் நபராக உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். அவருக்கு ஒரு வினோதமான காரியம் உண்டு. அது ஒரு _ அவருக்கு ஏதோ ஒன்றில் இருந்து விடுதலை பெறவேண்டி இருக்கிறது. அது ஒரு பிசாசின் ஆவி. மற்றும் எப்போ நான் _ அந்த மனிதன் நடந்து வந்தாரோ, அது இங்கிருந்து குதித்தது. நான் அது அந்த........சென்று விட்டது என்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு _ இச்சையின் ஆவி போல ஒன்றினிலிருந்து உங்களுக்கு விடுதலை பெற வேண்டும் என்று இருக்கிறீர்கள்? அது சரிதானே? காலூன்றி நில்லுங்கள். அவர் அப்பொழுதே உங்களுக்கு அதிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டார், சகோதரனே. நீங்கள் சுகம் பெற்று விட்டீர்கள். வீட்டுக்கு செல்லுங்கள். கர்த்தராகிய இயேசு ..........பார்க்கலாம். உங்களுக்கு ஒரு ஜெப அட்டை உண்டா, ஐயா? உங்களுக்கு ஒரு ஜெப அட்டை இல்லை. நல்லது, உங்களுக்கு ஒரு ஜெப அட்டை தேவை இல்லை. சற்று _ சற்று விசுவாசம் மட்டும் வையுங்கள். அது தான் முடிவா? 41. மீதமுள்ள உங்கள் அனைவருக்கும் சுகம் வேண்டுமா? நீங்கள் நம்புகிறீர்களா? இதை சரி என்று எண்ணுகிறீர்களா? என்னை சரியாக, உண்மை தான் பேசுகிறேன் என்று நிதானிக்கிறீர்களா? கர்த்தர் அது உண்மை என்று நிரூபித்துள்ளார்? நான் உங்கள் சகோதரன். மற்றும் ஒரு நாள் உங்களுக்காக தேவனிடத்தில் நான் பதில் சொல்ல வேண்டியதாக உள்ளது. அது சரிதானே? ஆனால், இப்பொழுது இங்கே, இயேசு கிறிஸ்து ஏற்கனவே சுகம் தரவில்லை என்று சொல்லுவதற்கு ஒருவர் கூட இங்கே இல்லை, பாருங்கள். அவர் உங்கள் விசுவாசத்தை உயர்த்துவதற்காக இதை செய்கிறார். இப்பொழுது, எனக்காக ஒன்று செய்வீர்களா, செய்வீர்களா? எவ்வளவு வியாதியஸ்தர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அது வியாதியுள்ளவர்கள். இப்பொழுது, உங்கள் கரங்களுக்கு பக்கத்தில் யாருடைய கரம் உண்டு என்று பாருங்கள். உங்கள் கரங்களை ஒருவர் தலையின் மீது ஒருவர் வையுங்கள். அதை செய்வீர்களா? இந்த மேடையில் கர்த்தர் என் ஜெபத்தை கேட்பார் என்றால், இந்த அரங்கிலுள்ள எல்லா இடத்திலும் அவர் கேட்பார். அது அப்படிதான் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது, ஒரு கணம் நமது தலைகளை கவிழ்ந்து இருப்போமாக. சர்வவல்லமையுள்ள தேவனே, வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரே, நித்திய ஜீவனுக்கு அதிபதியே, ஒவ்வொரு நல்ல ஈவையும் தருபவரே. இந்த கடுங்குளிரில், இந்த இரவில் இவ்வரங்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஜனங்களை உம் அண்டையில் கொண்டு வருகிறோம். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் கரங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களில் இருந்து வெளிய வா சாத்தான். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒவ்வொருவரையும் விட்டு வெளியே வா.